Question Text
Question 1 :
பதினோராம் வகுப்பு, இயல் 6
1."கட்டடக் கலை என்பது உறைந்து போன இசை" யாருடைய கூற்று?
2.குற்றாலக்குறவஞ்சி யாருடைய விருப்பத்திற்கு ஏற்ப அரங்கேற்றப்பட்டது.
3.குரைகடல் -இலக்கண குறிப்பு தருக.
4. திருவாசகம் முழுமையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
5.பிங்கல நிகண்டு என்னும் நூலில் எத்தனை பண்கள் உள்ளன
6.தமிழ் நாடகத் தலைமையாசிரியர் யார்
7."ழ" என்னும் சிற்றிதழை நடத்தியவரின் இயற்பெயர் என்ன?
8.ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கர் விருது பெற்ற ஆண்டு?
9.Disaster- கலைச்சொல் தருக.
10.blog- கலைச்சொல் தருக.
11.'கோல்டன் குளோப்' விருது பெற்ற முதல் இந்தியர்?
12.ஆலாலம் -பொருள் தருக.
13.நோதிறம், பாலையாழ்,காந்தாரம், முதலிய பண்கள் எந்த நூலில் உள்ளன?
14.தஞ்சை பெரிய கோவில் கருவறை விமானம் எத்தனை தளம் உடையது?
15."நம்ரத கே சாகர்" என்னும் பாடலை இயற்றியவர் யார்?
16.அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர்?
17.நாங்கூழ்- பொருள் தருக.
18. காகிதத்தில் ஒரு கோடு யாருடைய கவிதை தொகுப்பு?
19."சமரச சன்மார்க்க சபை "என்னும் நாடகக் குழுவை உருவாக்கியவர்?
20.ஆசியாவிலேயே முதன் முதலில் சிம்பொனி என்னும் மேற்கத்திய செவ்வியல் வடிவம் இசைக் கோவையைக் உருவாக்கியவர் யார்?