Question Text
Question 1 :
பதினோராம் வகுப்பு இயல் மூன்று
1.'சுதந்திர தாகம்' என்னும் புதினத்திற்க்காக 2001 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றவர்?
2. 'தமிழ் பதிப்புலகின் தலைமகன் 'என்று போற்றப்படுபவர்?
3.பொருட்பாலில் உள்ள இயல்கள் யாவை?
4.முயலா- இலக்கணக்குறிப்பு தருக.
5.காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
6.மாசுணம் -பொருள் தருக.
7. திராவிடர்களை 'மலைநில மனிதர்கள்' என்று அழைத்தவர்
யார்?
8.குறுந்தொகையை தொகுத்தவர் யார்?
9.துஞ்சல் - பொருள் தருக.
10.எழுத்து இதழினைத் தொடங்கியவர் யார்?
11.கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களின் ஆசிரியர்?
12." உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும்" என்னும் வரிகளை இயற்றியவர்?
13. ஜி. யு. போப் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை எந்த மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
14. சி. சு. செல்லப்பா உதவி ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள்?
15.திராவிடச் சொல்லான 'மலை' என்பது சமஸ்கிருத மொழியில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
16." விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ" என்கிறது...............
17. இந்திய ஆட்சிப்பணித் தேர்வை முதன்முதலாக, முழுவதுமாக தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர் யார்?
18.சிதவல்- பொருள் தருக.
19.Ethnic Group - கலைச்சொல் தருக.
20.சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் நூலின் ஆசிரியர்..........