Question Text
Question 1 :
ஒன்பதாம் வகுப்பு, இயல் 3
1." உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்" எனும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?
2.Hero Stone - கலைச்சொல் தருக.
3.திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழி பெயர்த்தவர் யார்?
4." செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை "இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி?
5........... என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
6.ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு?
7.தாமம் -பொருள் தருக.
8."பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; ஏட்டினோடு இரண்டும் அரியணை என்று" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
9.தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலின் ஆசிரியர் யார்?
10.திருக்குறள்............ நூல்களுள் ஒன்று.
11.திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது.
12.வசி- பொருள் தருக.
13.மணிமேகலையின் முதல் காதை........
14.எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக்........... பதிவு செய்துள்ளது.
15.பாங்கறிந்து- இலக்கணக்குறிப்பு தருக.
16.தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்ற நூலின் ஆசிரியர்.....
17. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்..........
18.1914 ஆண்டு........... நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
19. தண்டமிழ் ஆசான், சாத்தன், நன்னூற் புலவன் என புகழப்படுபவர் யார்?
20.காலம்- பொருள் தருக.