Question Text
Question 1 :
ஒன்பதாம் வகுப்பு, இயல் 8
1.ஹனுமன், நவ இந்தியா ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் யார்?
2.யசோதர காவியம் எத்தனை சருக்கங்கள் கொண்டது.
3.பெரியாரின் சிந்தனைகள் நூலின் ஆசிரியர் யார்?
4.லாவோட்சு............ என்ற சிந்தனை பிரிவைச் சேர்ந்தவர்.
5.சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
6.புதுக்கவிதையின் தந்தை.........
7.புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலின் ஆசிரியர்?
8.ரிவோல்ட்( ஆங்கில) இதழின் ஆசிரியர் யார்?
9.ஈ. வெ. ரா. வுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு?
10.அறம் -பொருள்
தருக.
11.ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது.......
12.ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட அசைகளின் சேர்க்கை........ ஆகும்.
13.யசோதர காவியம்,........ என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
14.ரவி - பொருள் தருக.
15.வயலும் சன்னலும்- இலக்கணக்குறிப்பு தருக.
16." மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்: அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்" என்று கூறியவர்?
17. ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை..........
18.யசோதர காவியம் எந்த சமயத்தைச் சார்ந்தது.
19.தங்கைக்கு -நூலின் ஆசிரியர்?
20......... பாரசீக புராணங்களில் வரும் புகழ்பெற்ற அரசர்.